கல்கிசையில் துப்பாக்கிச்சூடு: 2 பேர் பலி
கல்கிசை வட்டரப்பல பிரதேசத்தில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
பொலிஸாரின் கூற்றுப்படி, மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இரு நபர்கள் வீட்டினுள் நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
இதேவேளை சம்பவ இடத்திலேயே 36 வயதுடைய நபரொருவர் உயிரிழந்துள்ளதுடன், 20 வயதுடைய நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இது வரை தெரியவில்லை என்பதுடன் கல்கிசைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்