கலாபூஷணம் K.சந்திரசேகரன் காலமானார்
இலங்கை கலைத்துறையில் வானொலி, மேடை, திரைப்படம், தொலைக்காட்சியென அனைத்திலும் பல தசாப்தங்களாக சாதனை படைத்த கலாபூஷணம் K.சந்திரசேகரன் இன்று சனிக்கிழமை காலை காலமானார்.
கடந்த ஒரு வருட காலமாக இந்தியாவில் தனது மகனின் வீட்டில் தங்கியிருந்த நிலையில், சுவாச கோளாறால் பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே கடந்த சில தினங்களாக தீவிர சுகவீனம் காரணமாக பாதிப்பட்டிருந்த கலைஞர் K.சந்திரசேகரன் இன்று காலமானார்.
இறுதிக் கிரியைகள் தொடர்பாக பின்னர் அறிவிக்கப்படும் என்று உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்