கறுப்பு நிற ஆடையுடன் சபையில் அஞ்சலி

உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல் சம்பவம் இடம்பெற்று இன்றுடன் 3 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இதனை முன்னிட்டு இன்று வியாழக்கிழமை பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தியினர் கறுப்பு நிற ஆடைகளை அணிந்து கலந்துகொண்டுள்ளனர்.

மேலும், ஐக்கிய மக்கள் சக்தியினர் சபாநாயகரிடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக, உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல் சம்பவத்தில் உயிர்நீத்தவர்களுக்காக பாராளுமன்றில் ஒரு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.