கரும்புள்ளிகள் விரைவில் மறைய

கரும்புள்ளிகள் விரைவில் மறைய

கரும்புள்ளிகள் விரைவில் மறைய

📌”கரும்புள்ளிகள்” இன்று பலர் எதிர்கொள்ளும் பொதுவான தோல் பிரச்சனை. இந்த கரும்புள்ளிகள், இறந்த செல்கள், அழுக்கு மற்றும் தூசி ஆகியவை சருமத் துளைகளுக்குள் சிக்கிக்கொள்ளும் போது உருவாகின்றன. அவை பொதுவாக மூக்கு, கன்னங்கள் மற்றும் நெற்றியில் காணப்படுகின்றன. மேலும், இது தோள்பட்டை, கைகள், முதுகு மற்றும் கழுத்தில் காணக்கூடிய வாய்ப்புகள் உள்ளன.

📌நீங்கள் சூரிய ஒளியில் உள்ளீர்கள், அதிக மேக்கப் பயன்படுத்துதல், சருமத்தை ஸ்கிரப் செய்யாமல் இருப்பது, செதில்கள், அதிகப்படியான சருமம் உற்பத்தி, உடல் ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றங்கள், கர்ப்பம், மாதவிடாய், கருத்தடை மாத்திரைகளின் பயன்பாடு, ஸ்டீராய்டு கிரீம்களை நீண்ட நேரம் பயன்படுத்துதல் போன்றவை இந்த கரும்புள்ளிகளை ஏற்படுத்தும். அந்தவகையில் என்னென்ன வீட்டுப் பொருட்களை வைத்து கரும்புள்ளியைத் தடுக்கலாம் என்பதைப் பார்ப்போம்.

◼கற்றாழை சிறந்த சுத்திகரிப்பு பண்புகளைக் கொண்டுள்ளது மற்றும் உங்கள் சருமத்தில் உள்ள கரும்புள்ளிகளை அகற்ற உதவுகிறது. கற்றாழை உங்கள் சருமத்தில் இயற்கையான ஈரப்பதத்தை வைத்து, உங்கள் சருமத்தை எப்போதும் நீரேற்றமாக வைத்திருக்கும்.

◼மஞ்சளில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் கரும்புள்ளிகளைத் தடுப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கறைகளை நீக்கி, சருமத்தின் பொலிவை மேம்படுத்தவும் இது உதவுகிறது. 1 தேக்கரண்டி மஞ்சள் தூள் எடுத்து அதனுடன் 1 தேக்கரண்டி புதினா சாறு சேர்த்து நன்கு கலக்க வேண்டும். இந்த கலவையை முகத்தில் தடவி 15-20 நிமிடங்கள் வைத்திருந்து பின் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவவும். இதே செயல்முறையை ஒவ்வொரு நாளும் படுக்கைக்குச் செல்வதற்கு முன் தொடர வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் கரும்புள்ளி மறையும்.

◼தேங்காய் எண்ணெய் மாய்ஸ்சரைசராக மட்டுமல்லாமல் சுத்தப்படுத்தியாகவும் செயல்படுகிறது. எனவே, தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்துவதன் மூலம் கரும்புள்ளிகளை எளிதில் அகற்றலாம்.

◼எலுமிச்சை சாற்றில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின்-சி உள்ளது, இது இறந்த சரும செல்கள் மற்றும் கரும்புள்ளிகளை அகற்ற உதவுகிறது.

◼உருளைகிழங்கு மற்றும் தக்காளியில் இயற்கையான பிலீச்சிங் தன்மை இருப்பதனால் நம் முகத்தினில் உள்ள கரும்புள்ளி, இறந்த செல்களை நீக்கி முகத்தினை பொலிவுடன் வைத்திருக்கும். அதோடு முகத்தில் உள்ள கருவளையம் விரைவில் நீங்கிவிடும்.

◼வெள்ளரிக்காயில் வைட்டமின்கள், சிலிக்கா நிறைந்த கலவை, ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் போன்றவை இருப்பதால், வெள்ளரி கரும்புள்ளிகளை நீக்க உதவுகிறது. சில வெள்ளரிகளை எடுத்துக் கலக்கி அதனை பாதிக்கப்பட்ட இடங்களில் தடவி 20 நிமிடங்கள் வரை விடவும். பின் குளிர்ந்த நீரில் கழுவி விடலாம்.

◼வெண்மையான தயிர், இயற்கையாகவே பிரகாசத்தைத் தரக்கூடிய ஒன்றாகும். தோலுரிப்பு மூலம் உண்டான கரும்புள்ளிகளை நீக்குவதற்கு தயிர் உதவுகிறது. இதில் உள்ள லாக்டிக் அமிலம், நிறமாற்றத்திற்கு உதவுகிறது. மற்ற பிற குணப்படுத்தும் பொருள்களான மஞ்சள் அல்லது ஓட்மீல் உடன் பயன்படுத்தலாம். பருத்தி பஞ்சை உபயோகப்படுத்தி கரும்புள்ளிகள் மீது தயிர் தடவலாம். இவ்வாறு 15-20 நிமிடங்கள் விட்டு, பின் அதை கழுவலாம்.

◼தக்காளியை நன்கு பேஸ்ட் செய்து, கரும்புள்ளிகள் இருக்கும் இடத்தில் தடவி, 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த முறையை தினமும் செய்து வந்தால், கரும்புள்ளியை நீக்கிவிடலாம்.

கரும்புள்ளிகள் விரைவில் மறைய

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்