கம்பஹாவில் கோடாவுடன் இருவர் கைது

கம்பஹா பிரதேசத்தில் பல்லேவெல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாதுராகொட பகுதியில் கோடாவுடன் இரண்டு சந்தேக நபர்கள் மேல் மாகாணத்தின் வட பிராந்திய பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவினரால் நேற்று ஞாயிற்று கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.

கஸ்பே மற்றும் பாதுராகொட ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 42 மற்றும் 55 வயதுடைய இரண்டு நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேல் மாகாணத்தின் வட பிராந்திய பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஒருவரிடமிருந்து 2,642 லீற்றர் கோடாவும் மற்றையவரிடமிருந்து 1,020 லீற்றர் கோடாவும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேல் மாகாணத்தின் வட பிராந்திய பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்