கன்றுக் குட்டிக்குப் பெயர் சூட்டி மகிழ்ந்த பிரதமர் மோடி
தனது இல்லத்தில் பராமரிக்கப்படும் பசு ஈன்ற கன்றுக் குட்டிக்குப் பிரதமர் நரேந்திர மோடி பெயர் சூட்டிய நெகிழ்ச்சியான காணொளியை அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.
பிரதமர் மோடி குறித்த கன்றினை தனது பூஜை அறைக்கு அழைத்துச் சென்று பூஜை செய்து சால்வை அணிவித்துள்ளார்.
மேலும் கன்றுக் குட்டியின் நெற்றியில் ஒளி போன்ற வெள்ளை நிறத்தில் சுழி உள்ளதால் அதற்குத் தீப் ஜோதி என்று பெயர் சூட்டியுள்ளதாகப் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
இந்தக் காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.