கனடாவில் விமானமொன்றில் தீ!
கனடாவின் விமானசேவைக்கு சொந்தமான விமானமொன்றின் பிரதான இயந்திரப் பகுதி தீப்பற்றிய சம்பவம் ஒன்று இன்று ஞாயிற்றுக்கிழமை பதிவாகியுள்ளது.
விமானம் தரையிறங்கும் போது விமானத்தின் கியர் செயலிழந்தமையைத் தொடர்ந்து இந்த தீ விபத்து நிகழ்ந்துள்ளது.
கனடாவின் செயின்ட் ஜான்ஸில் இருந்து ஹாலிஃபாக்ஸுக்கு 80 பயணிகளுடன் பயணித்த விமானம் ஒன்றே இவ்வாறு தீ விபத்துக்குள்ளாகியுள்ளது.
எவ்வாறாயினும் இந்த விபத்து சம்பவத்தில் எந்தவித உயிரிழப்புகளோ ,காயங்களோ ஏற்படவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
- https://minnal24.com/wp-admin/index.php
- செய்திகள்
- நிகழ்வுகள்
- உலக செய்திகள்
- Videos