கண்ணிவெடிகளை இனங்காணும் எலி உலக சாதனை

கம்போடியாவில் கண்ணிவெடிகளை இனங்காண்பதற்காக ஈடுபடுத்தப்பட்ட எலி உலக சாதனை படைத்துள்ளது.

ரொனின் என அழைக்கப்படும் இந்த எலி 100க்கும் மேற்பட்ட கண்ணிவெடிகள் மற்றும் வெடிக்காத வெடிமருந்துகளை மோப்பம் பிடித்து புதிய உலக சாதனை படைத்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ரொனின் 2021 ஆம் ஆண்டு முதல் இதுவரை 109 கண்ணிவெடிகளை மற்றும் 15 வெடிக்காத வெடிமருந்துகளைக் கண்டுபிடித்துள்ளது.

 

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க