
கண்டியில் சட்டவிரோத தொழில் ஈடுபட்ட பெண்கள் கைது
கண்டி – தவுலகல பொலிஸ் பிரிவின் கடலாதெனிய பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது விபச்சாரம் நடத்திய குற்றச்சாட்டில் நேற்று ஞாயிற்றுக்கிழமை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது பிலிமத்தலாவை பகுதியைச் சேர்ந்த 68 வயதுடைய நபர் ஒருவரும் தெவனகல மற்றும் முருதலாவை பகுதியைச் சேர்ந்த 35 மற்றும் 48 வயதுடைய இரு பெண்களுமே இதன் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் குறித்து கண்டி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்