கணவனை கைதுசெய்ய முயன்ற பொலிஸ் உத்தியோகத்தர்: நகங்களால் கீறி காயப்படுத்திய மனைவி

கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் பொலிஸ் உத்தியோகத்தரை காயப்படுத்திய மனைவி மற்றும் கணவன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மல்வான வல்கம பிரதேசத்தை சேர்ந்த தம்பதிகளே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

மாளிகாவத்தை பிரதேசத்தில் மது போதையில் பயணித்த சாரதி ஒருவரை கைதுசெய்ய முற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தரின் கழுத்து மற்றும் கைகளை சாரதியின் மனைவி நகங்களால் கீறி காயப்படுத்தியுள்ளார்.

காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாளிகாவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.