கணவனை இழந்த பெண்: வன்கொடுமை செய்து கொலை செய்தவர் கைது
பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி, சின்னசேலம் அடுத்த கிராமத்தைச் சேர்ந்தவர் நிர்மலா(வயது – 28) என்கிற பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
கணவரை இழந்த இவர், தனது இரண்டு மகள்களுடன் வசித்து வந்துள்ளார்.இந்நிலையில் நாகுகுப்பம் தெற்கு மேடு பகுதியில் இருக்கும் பால் சேகரிக்கும் நிலையத்தில் பாலை வழங்கி விட்டு வீட்டிற்குத் திரும்பியவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.
மறுநாள் வீட்டின் அருகே உள்ள சோளன் வயலில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.
இதனையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது நாகுப்பத்தை சேர்ந்த குமரேசன்(வயது – 32) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது டீக்கடையில் வேலை செய்து வந்த குமரேசன் சம்பவத்தின் போது காட்டுவழி பகுதியில் மதுபோதையில் இருந்துள்ளார். அப்போது பாலை பண்ணைக்கு வழங்க வந்த நிர்மலாவை அடித்து சோளக்காட்டு பகுதிக்கு இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
மயக்கம் தெளிந்து எழுந்து கூச்சலிட முயன்ற பெண்ணை, கழுத்தை நெரித்து கொலை செய்து, மீண்டும் பலாத்காரம் செய்து தப்பிச் சென்றுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்