கணவனும் மனைவியும் தவறான முடிவு எடுத்த நிலையில் சடலமாக மீட்பு

திருக்கோவில் பிரதேசத்தில் இன்று செவ்வாய் கிழமை கணவனும் மனைவியும் ஒரே வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

திருக்கோவில் காயத்திரி கிராமம் 13வது வீதியை சேர்ந்த மனோகரன் தேவதர்சன் (வயது-28) மற்றும் தேவதர்சன் நிலூஜா (வயது – 23) இருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

சடலம் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளமையை தொடர்ந்து இருவர் மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்