கட்டுப்பணம் செலுத்தியோரின் எண்ணிக்கை உயர்வு
இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணம் செலுத்திய வேட்பாளர்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது.
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான கட்டுப்பாணம் செலுத்தும் காலம் எதிர்வரும் 14ஆம் திகதி நண்பகல் 12 மணியுடன் நிறைவடையவுள்ளது.
இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என்பது தொடர்பில் மக்களை தெளிவுபடுத்த தேர்தல்கள் ஆணைக்குழு செயற்பட வேண்டுமென வணக்கத்திற்குரிய ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
இல்லாவிட்டால் எதிர்வரும் தேர்தலில் பல வாக்குகள் செல்லுபடியற்றதாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்