
கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து தோட்டா மீட்பு!
கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் உள்ள பயண பொதிகள் பெற்றுக்கொள்ளும் பகுதிக்கு அருகில் 9 மி.மீ தோட்டா ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
சிறிலங்கன் தரை உதவி பணிப்பெண்ணால் இது அவதானிக்கப்பட்டு, மேலதிக விசாரணைக்காக இன்று திங்கட்கிழமை காலை விமான நிலைய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தோட்டாவை அவதானித்த சிறிலங்கன் தரை உதவி பணிப்பெண்ணிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த தோட்டாவை மேலதிக விசாரணைக்காக இரசாயன பகுப்பாய்வாளருக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்