கட்டாரில் இடம்பெற்ற உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி

கட்டார் (Qatar) மண்ணில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற மண்டூர் கண்ணகி விளையாட்டு கழகம் நடாத்திய உதைப்பந்தாட்ட போட்டியில் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த இளைஞர்கள் இணைந்து ஆரம்பித்த கட்டார் பட்டி எஃப்.சி (Qatar Batti Fc) அணியினர் 2ஆம் இடத்தை பெற்றுள்ளனர்.

இறுதிப்போட்டியில் கட்டாரில் உள்ள பலம் வாய்ந்த அணியான எவராக்ஸ் எஃப்சி (Everocks FC) மற்றும் கட்டார் பட்டி எஃப்சி (Qatar Batti Fc) அணியினர் போட்டியிட்டனர். இதில் கட்டார் பட்டி எஃப்சி அணியினர் 2ஆம் இடத்தை பெற்று கொண்டனர்.

குறித்த போட்டியில் நேற்றைய தினம் 14 விளையாட்டு கழகங்கள் பங்குபெற்றியிருந்தனர்.

குறித்த அணியானது கட்டார் நாட்டில் உள்ள கிழக்கு மாகாண இளைஞர்களை ஒன்றிணைத்து ஆரம்பிக்கப்பட்ட அணியாகும். இவ் அணியானது குறுகிய காலத்தில் பல திறமைவாய்ந்த இளைஞர்களை ஒன்றிணைத்து பல உதைப்பந்தாட்ட போட்டிகளில் பங்குபற்றி பல வெற்றிகளை பெற்ற அணியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க