கடும் மழையால் இடிந்து விழுந்த பாடசாலையின் மதில் சுவர்
-பதுளை நிருபர்-
பதுளை பகுதியில் இன்று பெய்த கடும் மழையின் காரணமாக பதுளை மத்திய மகா வித்தியாலயத்தில் மதில் சுவர் இடிந்து வீதியில் விழுந்துள்ளதாக, பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்தது.
குறித்த சம்பவம் இன்று வியாழக்கிழமை மதியம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த மதில் சுவர் உடைந்து பாடசாலையின் குறுக்கு வீதியில் விழுந்துள்ளதாகவும், எஞ்சி இருக்கும் மதில் சுவரும் உடைந்து விழும் அபாயம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
உடைந்து கிடக்கும் மதில் சுவற்றினை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக குறித்த நிலையம் மேலும் தெரிவித்தது.