கடவுச்சீட்டில் பாலினத்தைக் குறிப்பிடுவதற்குச் சிறப்புத் தெரிவு

அமெரிக்காவில் திருநங்கைகளும் திருநம்பிகளும் கடவுச்சீட்டில் தங்களது பாலினத்தைக் குறிப்பிடுவதற்குச் சிறப்புத் தெரிவு வழங்கப்பட்டுள்ளது.

தனிநபர்கள் ஆண் அல்லது பெண் என்ற பாலினத்தை இனி குறிப்பிடத் தேவையில்லை.  அவர்கள் எக்ஸ் என்று குறிப்பிடலாம்.

பிறப்புச் சான்றிதழிலோ முந்தைய அதிகாரத்துவ ஆவணங்களிலோ குறிப்பிடப்பட்டிருக்கும் அவர்களது பாலினம் கருத்தில் கொள்ளப்படமாட்டாது என்று கூறப்பட்டது. திருநங்கைகள், திருநம்பிகள், பாலினத்திற்கு உட்படாதவர்கள் ஆகியோர் துல்லியமாகப் பாலின ரீதியாக வகைப்படுத்தப்படும் முயற்சியில் இது பெரும் முன்னேற்றம் என்று வெள்ளை மாளிகை கூறியது.

அமெரிக்காவின் போக்குவரத்துப் பாதுகாப்பு நிர்வாகம் விமானச் சேவை நிறுவனங்களிடையே அந்த நடைமுறையைச் செயல்படுத்த முயற்சி எடுப்பதாகக் கூறப்பட்டது.