கடலுக்கு செல்ல வேண்டாம்: மீனவர்களுக்கு எச்சரிக்கை

மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலும், காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையிலும் கடற்பரப்புகளுக்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலும், காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையான கடற்பரப்புகளிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 – 65 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வப்போது கொந்தளிப்பாக காணப்படும் என அந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

திருகோணமலையில் இருந்து காங்கேசன்துறை வரையிலும் புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கடற்பரப்புகளில் காற்றுடன் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசுவதுடன் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகவும் காணப்படும்.