கடற்பகுதியில் சுழற்காற்று

கொழும்பு பம்பலப்பிட்டியை அண்மித்த கடற்பகுதியில் சுழற்காற்று உருவாகி நகர்ந்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடல் நீர் உறிஞ்சப்பட்டு நிலத்தில் ஏற்படும் சூறாவளிக்கு நிகரான தோற்றம் கடலில் ஏற்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடலில் இருந்து நிலத்தை நோக்கி வந்த இந்த நிலை படிப்படியாக நிலத்தை வந்தடையும் போது எப்படி மறைகிறது என்பது தொடர்பான காணொளியும் காட்டப்பட்டுள்ளது.

இந்த புயல் கரைக்கு வந்த போது பம்பலப்பிட்டி புகையிரத நிலையத்தின் கூரை காற்றினால் அடித்துச் செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.