
கடற்கரையில் கைதாகிய வெளிநாட்டவர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
யாழ்ப்பாணம் காரைநகர் கசூரினா கடற்கரையில் பகுதியில் வெளிநாட்டில் இருந்து வவுனியாவிற்கு வந்தவர்கள் நேற்று முன்தினம் வியாழக்கிழமை மது போதையில் குழப்பம் விளைவித்த ஆறு பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த கடற்கரை பகுதியில் அவர்களில் ஒருவரின் மோதிரத்தை காணவில்லை என கடற்கரையில் கடமையில் இருந்த உயிர்காப்பு பிரிவை சேர்ந்த பொலிஸாருடன் முரண்பட்டுள்ளனர். அது தொடர்பில் உயிர்காப்பு பிரிவு பொலிஸார் வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
இதனையடுத்து கடற்கரைக்கு விரைந்த பொலிஸார் 6 ஆண்களையும் 4 பெண்களையும் கைது செய்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று மேலதிக விசாரணைகளுக்கு பின்னர் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய வேளை 4 பெண்களை பிணையில் செல்ல அனுமதித்த மன்று 6 ஆண்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்