கடற்கரையில் கரையொதுங்கிய டொல்பின்

திருகோணமலை – கிண்ணியா பகுதியிலுள்ள கடற்கரையில் நேற்று திங்கட்கிழமை மாலை டொல்பின் மீனொன்று கரையொதுங்கியுள்ளது.

குறித்த டொல்பினை பார்வையிடுவதற்காக அதிகளவான பொதுமக்கள் கிண்ணியா கடற்கரைக்கு வருகை தந்திருந்தனர். பின்னர் குறித்த டொல்பின் பாதுகாப்பாக கடலில் விடப்பட்டுள்ளளது.

இந்த டொல்பின் மீனானது எதனால் கரை ஒதுங்கியது என்பது தெரியவரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.