கடமைக்கு திரும்பாத இராணுவ வீரர் கைது

-பதுளை நிருபர்-

இராணுவத்தில் இருந்து விடுமுறையில் வந்த இராணுவ வீரர் கடமைக்கு திரும்பாத நிலையில், குறித்த இராணுவ வீரர் பசறை பொலிஸ் அதிகாரிகள் குழுவினால் நேற்று செவ்வாய்க்கிழமை பசறை பரமன்கட பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

பசறை, பரமன்கட, கல்பொத்த பத்தனை பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் 12வது கஜபா படைப்பிரிவைச் சேர்ந்த வவுனியா பெரியவாலங்காட்டு முகாமில் பணியாற்றிக் கொண்டிருந்த வேளையில் கடந்த ஜனவரி மாதம் 31ஆம் திகதி விடுமுறையில் வீடு திரும்பிய அவர் அவருக்கு வழங்கப்பட்ட விடுமுறை முடிந்தும் அவர் மீண்டும் கடமைக்கு சமூகமளிக்கவில்லை

பின்னர் இராணுவத் தலைமையகம் இராணுவத்த இருந்து குறித்த நபர் கடமைக்கு சமுகம் அழிக்க வில்லை என பசறை பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில் பொலிஸ் குழு ஒன்று குறித்த நபர் வீட்டுக்கு சென்று குறித்த இராணுவ வீரரை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்

குறித்த நபர் பசறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், குறித்த நபர் பணிக்கு சமூகமளிக்காமல் வீட்டில் தங்கியிருந்து வேறு சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டாரா என்பது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க