கடதாசிகளுக்கு தட்டுப்பாடு இல்லை – கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்தன

திட்டமிடப்பட்ட வகையில் பிரதான பரீட்சைகளை நடத்துவதற்கு அவசியமான கடதாசிகள் தட்டுப்பாடின்றி கையிருப்பில் உள்ளதாக கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

அஸ்கிரிய மகாநாயக்க தேரரை நேற்று சந்தித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

எதிர்வரும் மே மாதம் கல்வி பொது தராதர சாதாரண தரப்பரீட்சையை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சர் தெரிவித்தார்.