
கஞ்சா, வாள்கள் மீட்பு: மூவர் கைது
யாழ். இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதகல் பகுதியில் நேற்று திங்கட்கிழமை கஞ்சா மற்றும் வாள்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 2 கிலோ 600 கிராம் கஞ்சாவும், மூன்று வாள்களும் ஒரு கூரிய ஆயுதமும் மீட்கப்பட்டது.
சந்தேகநபர்கள் மூவரும் இளவாலை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர்.
விசாரணைகளின் பின்னர் அவர்களை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்