கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு 3 மாத விடுமுறை

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு நாடாளுமன்றத்தினால் 3 மாதங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாடாளுமன்றம் இன்று புதன் கிழமை காலை 9.30க்கு கூடிய அதே வேளை பிரதான நடவடிக்கைகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்லவினால் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் விடுமுறைக்கான முன்மொழிவு முன்வைக்கப்பட்டது.

இதனைத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் வழிமொழிந்தார்.

இதனையடுத்துதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு நாடாளுமன்றத்தினால் 3 மாதங்களுக்கு விடுமுறை வழங்க இணக்கம் தெரிவிக்கப்பட்டது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்