கச்சத் தீவை மத்திய அரசு 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு பெற வேண்டும்
இலங்கை வசம் உள்ள கச்சத் தீவை மத்திய அரசு 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு பெற வேண்டும் என்று ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை இராமநாதபுரம் சின்னக்கடை வீதியில் உள்ள தமுமுக பள்ளிவாசலில் நடைபெற்ற தெற்கு மண்டல புத்தாக்க பயிலரங்கம் கருத்தரங்கில் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே இந்த கோரிக்கை முன்வைத்துள்ளார்.
இராமநாதபுரத்தில் மீனவர்கள் தொடர்ந்து பல இடர்பாடுகளை சந்திந்து வருகின்றனர். தங்கச்சிமடம், ராமேஸ்வரம் மீனவர்களின் படகுகள் சேதமடைவது இலங்கை மீனவர்கள் சிறைபிடிப்பு தொடர் நிகழ்வாகவுள்ளது.
மேலும் இந்தியா கடந்த மூன்று மாதங்களில் 250 கோடி டொலர்களை இலங்கைக்கு கொடுத்துள்ளது. மேலும் 22,500 கோடி தேவையெனவும் அந்நாடு கோரிக்கை விடுத்துள்ளது.
140 கோடி டொலர்களை சீனா இலங்கையில் முதலீடு செய்துள்ளது. இதற்காக துறைமுகத்தின் 663 ஏக்கரில் 280 ஏக்கரை 99 ஆண்டுகளுக்கு குத்தகை விட இலங்கையிடன் சீனா கோரியுள்ளது. சீனாவை விட அதிகம் பணம் கொடுத்துள்ள மத்திய அரசு கச்சத் தீவை 99 ஆண்டுகள் குத்தகைக்கு கேட்டுப் பெற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.