கசிப்பு உற்பத்தி, விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது

-பதுளை நிருபர்-

பசறை மீதும்பிட்டி பகுதியில் கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்ட பெண் உட்பட மேலும் ஒருவரை கைது செய்துள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.

மீதும்பிட்டி தொழிற்சாலைக்கு அருகாமையில் வசிக்கும் 45 வயதுடைய ஆண் ஒருவரும் 42 வயதுடைய பெண் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்களிடம் இருந்து 7,500 மில்லி லீற்றர் கசிப்பும் 202,500 மில்லி லீற்றர் கோடாவும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பசறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மீதும்பிட்டி தொழிற்சாலைக்கு அருகாமையில் இருவர் கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபடுவதாக பசறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஈ.எம்.பியரட்ணவிற்கு கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் இந்த கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த இருவருக்கும் எதிராக பசறை நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்