கசிப்புடன் மூவர் கைது

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணத்தில் இன்று வெள்ளிக்கிழமை கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லூசன் சூரிய பண்டாரவின் கீழ் இயங்கும் யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உரும்பிராய் தெற்கு செல்வபுரம் பகுதியில் வைத்து மூன்று சந்தேக நபர்கள் 8 1/2 லீற்றர்கள் கசிப்புடன் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபர்கள் மூவரும் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட நிலையில்/ அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்