கங்கைகளின் நீர் மட்டம் அதிகரிப்பு

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கங்கைகளின் நீர்மட்டம் அதிகரித்து வருவதாக நீர்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

களுகங்கை மற்றும் நில்வளா கங்கைகளின் நீர்மட்டம் அதிகரித்து வருவதாக அந்தத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதன்காரணமாக, குறித்த கங்கைகளை அண்மித்த தாழ்நில பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்