ஓய்வூதியம் வழங்கப்படும் திகதிகள் அறிவிப்பு
ஓய்வூதிய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஜகத் டயஸின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில் அடுத்த வருடத்துக்கான ஓய்வூதியம் வழங்கப்படும் திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஜனவரி, பெப்ரவரி, மார்ச், செப்டம்பர், ஒக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களுக்கான ஓய்வூதிய கொடுப்பனவு 10 ஆம் திகதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஏப்ரல், மே, ஜூன், ஜூலை ஆகிய மாதங்களில் 9 ஆம் திகதி ஓய்வூதியம் வழங்கப்படும்.
இதேநேரம், ஓகஸ்ட் மாதத்தில் மாத்திரம் 7ஆம் திகதி ஓய்வூதிய கொடுப்பனவுகள் வழங்கப்படும் என குறித்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
- https://minnal24.com/wp-admin/index.php
- செய்திகள்
- நிகழ்வுகள்
- உலக செய்திகள்
- Videos