ஓய்வுபெற்ற பொலிஸ் அதிகாரியின் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு!

களுத்துறை வில்பத்த பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது, இன்று புதன்கிழமை அதிகாலை, துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக, தொடங்கொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீட்டின் ஜன்னல்களில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும், சம்பவத்தில் யாருக்கும் எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை எனவும், பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

களுத்துறை குற்றப்புலனாய்வுப் பிரிவு துப்பாக்கிச் சூடு குறித்து விசாரணை நடத்தி வருகிறது.

ஓய்வுபெற்ற பொலிஸ் அதிகாரி ஒருவரின் வீட்டை குறிவைத்தே, இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக, முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகள், ஓய்வுபெற்ற குறித்த பொலிஸ் அதிகாரியின் இளைய மகனின் பெயரைச் சொல்லி அழைத்து, வீட்டை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் பொலிஸார் தெரிவித்தனர்.

எனினும், துப்பாக்கிதாரிகள் அழைத்த பெயருக்குரிய நபரான, ஓய்வுபெற்ற  பொலிஸ் அதிகாரியின் இளைய மகன், தற்போது வெளிநாடு ஒன்றில் வசித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Minnal24 வானொலி