ஓபன் ஏஐ மீது குற்றச்சாட்டு வைத்த இளைஞர் மரணம்: வீட்டில் இருந்த பென்டிரைவ் மாயம்

ஓபன் ஏஐ நிறுவனம் மீது குற்றச்சாட்டு வைத்ததை தொடர்ந்து மர்மமான முறையில் உயிரிழந்த இந்திய வம்சாவளி இளைஞரின் வீட்டில் இருந்த பென்டிரைவ் மயமானது விசாரணையில் தெரியவந்துள்ளது.

சேட் ஜிபிடியை உருவாக்கிய ஓபன் ஏஐ நிறுவனத்தின் முன்னாள் ஊழியரான சுசீர் பாலாஜி, அந்த நிறுவனம் பதிப்புரிமை விதிகளை மீறுவதாக கடந்த அக்டோபர் மாதம் குற்றம்சாட்டினார்.

தொடர்ந்து சான் பிரான்சிஸ்கோவில் உள்ள தனது இல்லத்தில், டிசம்பர் 14ஆம் திகதி அவர் சடலமாக கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தன்னைதானே சுட்டுக்கொண்டு சுசீர் தற்கொலை செய்துக்கொண்டதாக பொலிஸார் தெரிவித்த நிலையில், சுசீரின் பெற்றோர் அதனை மறுத்து வருகின்றனர்.

இது தொடர்பாக அமெரிக்க புலானய்வு அமைப்பு விசாரணை நடத்த அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்