ஓட்டமாவடி பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் புதிய காரியாலய திறப்பு விழா

-சம்மாந்துறை நிருபர்-

ஓட்டமாவடி பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் புதிய காரியாலய திறப்பு விழா சங்கத்தின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.எம்.எஸ். ஹாறூன் ஸஹ்வியின் தலைமையில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்வின் பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், கெளரவ அதிதியாக கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி திணைக்கள ஆணையாளர் பி. தனேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

திணைக்களத்தின் அதிகாரிகள் கூட்டுறவு சங்கத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள், ஊர் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டு வைபவ ரீதியாக இக்காரியாலயம் திறப்பு விழாவில் கலந்து கொண்டனர்.

மேலும் மட்/ ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் கேட்போர் கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சங்கத்தின் முன்பள்ளி பாலர் பாடசாலை மாணவர் விடுகை விழா நிகழ்விலும் அதிதிகள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

Minnal24 FM