ஒலிம்பிக்கில் கிரிக்கெட்: புதிய அறிவிப்பு

2028 ஆம் ஆண்டு அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சலிஸ்ஸில் இடம்பெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில், கிரிக்கெட் போட்டி இடம்பெறும் என சர்வதேச கிரிக்கெட் பேரவை உறுதிப்படுத்தியுள்ளது.

குறித்த போட்டிக்கான இடமாக தெற்கு கலிபோர்னியாவின் போமோனாவில் தற்காலிகமாக மைதானம் ஒன்று கட்டப்படவுள்ளதாக போட்டி ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது.

லொஸ் ஏஞ்சல்ஸ் கிரிக்கெட் போட்டியில் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில் தலா ஆறு அணிகள் பங்கேற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறுதியாக 1900 ஆம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் மாத்திரமே கிரிக்கெட் போட்டிகள் இடம்பெற்றது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க