ஒரு நாளைக்கு 2500 கடவுச்சீட்டுக்களை வழங்க நடவடிக்கை!

ஒரு நாளைக்கு 2500 கடவுச்சீட்டுக்களை வழங்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

இதுவரை ஒரு நாளைக்கு, 1200 கடவுச்சீட்டுகள் மட்டுமே விநியோகிக்கப்பட்டு வந்துள்ளதாக, அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

அவசரமாக வெளிநாடு செல்ல வேண்டிய இருப்பவர்கள், கடவுச்சீட்டுகளை பெறுவதற்கு தனி பகுதி திறக்கப்பட்டுள்ளதாக, அவர் மேலும் கூறினார்.

அந்த பகுதியில் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள், ஒரு குழுவால் பரிசீலிக்கப்பட்டு, விரைவில் கடவுச்சீட்டுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும், என்று அமைச்சர் விஜேபால தெரிவித்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

Minnal24 FM