
ஒன்லைன் காதல்: வாழ்க்கையை தொலைத்த பெண்
வலைத்தளங்களின் மூலமாக அறிமுகமாகி ஒன்லைன் மூலமாக நண்பர்களாகி அதன் பின்னர் காதல் வயப்பட்டு நாடு கடந்து தங்கள் துணையை கரம்பிடித்த பல சம்பவங்களை நாம் சமூக வலைத்தளங்களில் பார்த்திருக்கின்றோம்.
“ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்” என்ற வெப் சீரிஸில் வரும் பிரபலமான நடிகரைப் போன்ற உருவம் கொண்ட ஒருவரிடம் ஒன்லைன் மூலம் காதல் வயப்பட்டு அவருக்காக தனது கணவரை விவாகரத்து செய்த பெண் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
இவர் மீது கொண்ட அதீத காதலால் குறித்த இப்பெண் தன்னுடைய காதலனுக்கு இலட்சக்கணக்கான மதிப்புள்ள பல பரிசு பொருட்களை வழங்கியுள்ளார். மேலும் ஒரு வருடத்திற்கும் மேல் நீடித்த இந்த காதலில் ஒருமுறையேனும் தன்னை நேரடியாக சந்திக்க தன்னுடைய காதலன் வரவில்லை என்பதனை யோசித்த இப்பெண் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்துள்ளார்.
இது தொடர்பில் சமூக வலைத்தளம் வாயிலாக அந்தப் பெண் தெரிவிக்கும் போது “ஒன்லைன் வழியாக காதல் என்ற பெயரில் மோசடி செய்வது உலகம் முழுவதும் தற்போது நடந்து வருகிறது. நானும் இதில் மாட்டிக்கொண்டு என் வாழ்க்கையைத் தொலைத்து விட்டேன். இது பற்றி எல்லோரும் அவதானமாக இருங்கள்” என்று அவர் தெரிவித்துள்ளார்.