ஒன்றை ஒன்று முந்திச் செல்ல முயன்ற இரண்டு வாகனங்களால் நேர்ந்த கதி!
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் சுதுமலையில், கப் ரக வாகனம் ஒன்றும், ஹயஸ் ரக வாகனம் ஒன்றும் ஒன்றை ஒன்று முந்தி செல்ல முற்பட்ட வேளை, வீடு ஒன்றின் மதிலை கப் ரக வாகனம் மோதியுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவமானது தாவடி – சுதுமலை வீதியில் சுதுமலை அம்மன் கோவிலுக்கு அருகாமையில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது.
இதன்போது, சுதுமலை அம்மன் கோவில் குருக்களது வீட்டு மதிலே பாதிக்கப்பட்டுள்ளதுடன் தொலைத்தொடர்பு கோபுரம் ஒன்றும் சேதமடைந்துள்ளது.
இதே வேளை, இந்த விபத்து சம்பவத்தில் எவருக்கும் பாதிப்பு எதுவும் இடம்பெறவில்லை என்பதுடன், மேலதிக விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.