ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளராக ரட்ணகுமார் நிசாந்தன் கடமைகளை பொறுப்பேற்றார்
ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளராக ரட்ணகுமார் நிசாந்தன் இன்று வியாழக்கிழமை தனது கடமைகளை பொறுப்பேற்றார்
இவர் தகவல் அமைவுகள் மற்றும் மேலாண்மை இயல் – சென்னைப் பல்கலைக்கழகம் (Information systems and management – University of Madras) , பொது நிர்வாகம் மற்றும் முகாமைத்துவ முதுமாணி – கொழும்பு பல்கலைக்கழகம் (Masters in Public Administration and Management – University of Colombo) ஆகிய கல்வி நிலைகளைப் பூர்த்தி செய்தவர்.
யாழ்ப்பாணம் கமநல சேவைகள் திணைக்களத்தில் பிரதி ஆணையாளராக பல வருடங்கள் பணியாற்றிய இவர், கடந்த இரு வருடங்களாக ஜனாதிபதி செயலகத்தில் உலக உணவுத்திட்ட பணிப்பாளராக பணியாற்றினார்.
நிர்வாக சேவை தரத்தினை பூர்த்தி செய்த நிலையில், ஒட்டி சுட்டான் பிரதேச செயலாளராக கடமைகளை பொறுப்பேற்றார்.