ஐ.ம.சக்தியினரின் போராட்டத்தில் குழப்பம் : அரசதரப்பு ஆதரவாளர் மீது தாக்குதல்

நாடு பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் பல இடங்களில் வலுவடைந்து வருகின்றன.

இந்நிலையில் இன்று பருத்தித்துறை தொடக்கம் தெய்வேந்திரமுனை நோக்கிய பேரணி” என்ற தொனிப்பொருளில் ஐக்கிய பெண்கள் சக்தியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இதன் முதல் கட்டமாக இன்று காலை கச்சேரியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிய இந்த பேரணி செல்கின்றது.

இன்றைய பேரணி யாழ் மாவட்ட செயலகத்தில் இருந்து யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தை வந்தடைந்த இறுதி நேரத்தில் அங்கு ஐனாதிபதிக்கு ஆதரவாக ஒரு ஒரு குழு செயற்படவே அங்கு முறுகல் நிலை உருவானது.

முறுகல் நிலை ஏற்பட்டதுடன் கைகலப்பும் உருவானது. இதன்போது போராட்டத்தில் ஈடுபட்ட ஐக்கிய மக்கள் கட்சியினர் தொடர்ந்தும் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பிக் கொண்டிருந்ததுடன் அரசுக்கு ஆதரவாக வந்த அருண்சித்தார்த் குழப்பவாதிகளுக்கு எதிராகவும் கோஷம் எழுப்பினர்.

இதன்போது போராட்டத்தில் குழப்பத்தில் ஈடுபட்டவர்களை பொலிஸார் அங்கிருந்து பாதுகாப்பாக முச்சக்கர வண்டியில் அனுப்புவதற்கு முயற்சித்த வேளை போராட்டக்காரர்கள் முச்சக்கர வண்டியையும் கடுமையாகத் தாக்கினர். பெரும் பிரயத்தனத்திற்கு மத்தியில் பொலிஸாரே முச்சக்கர வண்டியை செலுத்தி அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் ஹிருணிகா பிரேமச்சந்திர உமாச் சந்திர பிரகாஷ் உள்ளிட்ட கட்சியின் அமைப்பாளர்கள் ஆதரவாளர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த பேரணி அநுராதபுரம் ஊடாக கொழும்பு நோக்கி கட்டம் கட்டமாக ஏழு நாட்களுக்கு கொழும்பைச் சென்றடையும்