ஐ.எம்.எப். செல்கிறார் சப்ரி

இம்மாதம் 18அம் திகதி ஆரம்பமாகவுள்ள சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடலுக்காக நிதி அமைச்சர் அலி சப்ரி தலைமையில், மத்தியவங்கி ஆளுநர், நிதியமைச்சின் செயலாளர் உள்ளடங்கிய குழுவினர் வொஷிங்டனுக்கு செல்வுள்ளனர்.

எதிர்வரும் 18ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள கலந்துரையாடல் 5 நாட்களுக்கு இடம்பெறவுள்ளது.

அரசாங்கத்தின் சர்வதேச கடனை மறுசீரமைக்க உதவும் நிதி மற்றும் சட்ட ஆலோசகர்கள் 21 நாட்களுக்குள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்றும் நிதியமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.