
ஐஸ் போதைப் பொருளுடன் 21 வயதுடைய சந்தேக நபர் கைது
-சம்மாந்துறை நிருபர்-
அம்பாறை – சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட செட்டவட்டை பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் நேற்று வியாழக்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்மாந்துறை பெருங்குற்ற பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை நடவடிக்கையின் போது 21 வயதுடைய சந்தேக நபர் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடமிருந்து 2 கிராம் 470 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருள் மீட்கப்பட்டது. சந்தேக நபர் சான்றுப் பொருள்களுடன் சட்ட நடவடிக்கைக்காக சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சோதனை நடவடிக்கையானது சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலதின் வழிகாட்டுதலில் பெருங்குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி கே.சதீஸ்கர் தலைமையிலான குழுவினர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்