Last updated on November 23rd, 2024 at 11:10 am

ஐஸ் போதைப் பொருளுடன் கல்முனையில் இருவர் கைது

ஐஸ் போதைப் பொருளுடன் கல்முனையில் இருவர் கைது

-அம்பாறை நிருபர்-

ஐஸ் போதைப் பொருட்களை நீண்ட காலமாக சிறு பொதி செய்து வியாபாரம் செய்து வந்த இரண்டு சந்தேக நபர்களை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

நேற்று வியாழக்கிழமை இரவு கல்முனை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமாக நடமாடிய இருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டனர்.

இதன் போது, கல்முனைக்குடி 9 பிரிவு மதிரிஸா வீதியில் வசிக்கும் 26 வயதுடைய 2 பிள்ளைகளின் தந்தை 970 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருளுடனும், கல்முனைக்குடி 2 ஆம் பிரிவு கிறீன் பீல்ட் பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய சந்தேக நபர் 870 மில்லி கிராம் போதைப் பொருளுடனும் கைதாகினர்.

கைதான 2 சந்தேக நபர்களையும் கல்முனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்த கல்முனை விசேட அதிரடிப்படையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

மேலும், இந்த கைது நடவடிக்கையானது கல்முனை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஏ.டி.சி.எஸ்.ரத்நாயக்கவின் பணிப்புரைக்கமைய முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் கடந்த சில தினங்களாக இப்பகுதியில் ஐஸ் போதைப்பொருட்கள் அதிகளவாக மீட்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்