ஐஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் ஐஸ் போதைப்பொருளுடன் நேற்று சனிக்கிழமை சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவின் கொட்டிகாவத்த சந்திக்கு அருகில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது, 10 கிராம் 400 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் களனிமுல்ல, அங்கொடை பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

இதேவேளை, கடவத்தை பொலிஸ் பிரிவின் ரஞ்சயகம பகுதியில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது, 12 கிராம் 250 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த ஒரு சந்தேக நபரும் 11 கிராம் 300 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த மற்றொரு சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கடவத்தை பகுதியைச் சேர்ந்த 24 மற்றும் 47 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.

மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க