ஐஸ் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது!

நவகமுவ பகுதியில் நேற்று திங்கட்கிழமை 4.3 கிலோ கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் போதைப்பொருளுடன்  37 வயது சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நவகமுவ  பொலிஸ்  அதிகாரிகள் கொரத்தொட்ட பகுதியில் ஒரு முச்சக்கர வண்டியை சோதனை செய்தபோது குறித்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.

சோதனையின் போது  ​​போதைப்பொருள் விற்பனையால் பெறப்பட்டதாக   சந்தேகிக்கப்படும் 120,000 ரூhய் பணம் மற்றும் 4.3 கிலோ ஐஸ்,  792 கிராம் ஹெராயின்  ஆகியவற்றை  பொலிஸார் பறிமுதல் செய்தனர்

கைது செய்யப்பட்ட நபர்,  நவகமுவவில் உள்ள கொரத்தொட்ட பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவர்,  என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

Minnal24 FM