ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் மன்னார் விஜயம்

-மன்னார் நிருபர்-

ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் நேற்றைய தினம் புதன்கிழமை  மாலை மன்னாரிற்கு விஜயம் செய்தனர்.

இதன் போது பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனை அவருடைய மன்னார் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

தற்போதைய ஜனாதிபதி தேர்தல் மற்றும் தற்போதைய சூழ்நிலைகள் தொடர்பாகவும் பாராளுமன்ற உறுப்பினரிடம் கேட்டறிந்து கொண்டனர்.

இதன்போது இலங்கை தமிழரசு கட்சியின் மன்னார் மாவட்ட செயலாளர் ஜஸ்ரின் துரம் இச் சந்திப்பில் கலந்து கொண்டார்.