ஐபிஎல் தொடரின் 17 ஆவது போட்டி : சென்னை அணிக்கு 184 ஓட்டங்கள் வெற்றி இலக்கு!

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 17 ஆவது போட்டி தற்போது நடைபெற்று வருகின்றது.

இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கெப்பிடல்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற டெல்லி கெப்பிடல்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி கெப்பிடல்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 183 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

துடுப்பாட்டத்தில் டெல்லி கெப்பிடல்ஸ் அணியின் சார்பில் கே.எல்.ராகுல் 77 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

இந்தநிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 184 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க