ஐசிசி T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி : உலகக்கிண்ணம் யாருக்கு?

ஐசிசி இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

குறித்த போட்டியில் இந்திய மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மோதவுள்ளன.

பிரிஜ்டவுனில் இலங்கை நேரப்படி இன்றிரவு 8 மணியளவில் இந்த போட்டி ஆரம்பமாகவுள்ளது.

இன்றைய போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுமாயின் 13 ஆண்டுகளின் பின்னர் இந்திய அணி வெற்றி பெற்ற முதலாவது உலகக் கிண்ணம் இதுவாக அமையும்.

அதேநேரம் தென்னாபிரிக்க அணி வெற்றி பெறுமாயின் அது அந்த அணியின் முதலாவது உலகக் கிண்ண வெற்றியாக அமையும்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்