ஐக்கிய அரபு இராச்சியத்தின் பொது மன்னிப்பு 2 மாதங்களுக்கு நீடிப்பு
வெளிநாட்டவர்களுக்காக ஐக்கிய அரபு இராச்சிய அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டிருந்த பொது மன்னிப்பு காலம் மேலும் 2 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக டுபாயிலுள்ள இலங்கை துணை தூதரகம் அறிவித்துள்ளது.
விசா காலவதியான நிலையில் தங்கியுள்ள மற்றும் கடவுச்சீட்டுகளைத் தொலைத்துள்ள வெளிநாட்டவர்கள், தங்களது சொந்த நாடுகளுக்குத் திரும்புவற்காக செப்டெம்பர் முதலாம் திகதி முதல் ஒக்டோபர் 31ஆம் திகதி வரையில் பொது மன்னிப்பு காலம் அமுல்படுத்தப்பட்டிருந்தது.
குறித்த காலப்பகுதியில் 2,484 இலங்கையர்கள் பொது மன்னிப்பு காலத்துக்கான சேவைகளைப் பெறுவதற்கு டுபாயிலுள்ள இலங்கை துணை தூதரகத்திற்கு வருகைதந்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், கடந்த ஒக்டோபர் 31ஆம் திகதியுடன் முடிவடையவிருந்த பொது மன்னிப்பு காலம் எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதிவரை 2 மாதங்களுக்கு நீக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்