ஏப்ரல் 7 இல் 150 போராட்டங்களை நடத்தத் தீர்மானம்

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் பொதுமக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள சுமைகளுக்கு எதிராக தேர்தல் தொகுதிகளை மையப்படுத்தி 150 போராட்டங்களை ஒரே நேரத்தில் நடத்துவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.

அனைத்து இடங்களிலும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7ஆம் திகதி ஒரே நேரத்தில் போராட்டம் நடத்தப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்துக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போராட்டம் கடந்த 15ஆம் திகதி கொழும்பில் இடம்பெற்றிருந்த நிலையிலேயே நாடு முழுவதும் போராட்டத்தை நடத்த அக்கட்சி தீர்மானித்துள்ளது.

இதேவேளை, கட்சியின் மே தினக் கொண்டாட்டம் கண்டியில் நடைபெறவுள்ளது அதேவேளை, தேசிய மாநாடு எதிர்வரும் ஜூலை மாதம் 28ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது.