பட்டியல் விரைவில் அறிவிக்கப்படும்

ஏப்ரல் 30 ஆம் திகதி முதல், பூரணமாக தடுப்பூசி செலுத்திக் கொண்டமைக்கான அத்தாட்சி அட்டை கட்டாயமாக வைத்திருக்க வேண்டிய பொது இடங்களின் பட்டியல் விரைவில் அறிவிக்கப்படும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், எதிர்வரும் தமிழ் – சிங்கள புத்தாண்டுக்கு முன்னதாக அடுத்த 2 வாரங்களுக்குள் பூஸ்டர் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளுமாறு தொற்று நோய் பிரிவின் பிரதம தொற்று நோய் நிபுணர் மருத்துவர் சமித்த கினிகே அறிவுறுத்தியுள்ளார்.

இதேவேளை, ஏப்ரல் 30ஆம் திகதி முதல் பொது இடங்களுக்கு மூன்று தடுப்பூசிகளையும் ஏற்றாதவர்கள் செல்ல முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

Minnal24 FM